(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு
மேற்கு வலய முதலைக்குடா மகாவித்தியாலய அதிபராக இலங்கை அதிபர் சேவையை
சேர்ந்த வைரமுத்து சுந்தரநாதன் இன்று(20) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்
கொண்டார்.
அங்கு அதிபராக இருந்த டரி. கோபால பிள்ளை தேர்தலில் அபேட்சகராக இருப்பதால் அவர் ஓய்வு பெற்று சென்றிருந்தார்.
பதவியேற்பு
வைபவத்தில் மட்டு. மேற்கு வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் டி. யசோதரன்
முன்னாள் அதிபர் சிவ. அகிலேஸ்வரன் பட்டிப்பளை உப தவிசாளர் பொன்.
கோபாலபிள்ளை உப அதிபர் ரி.சிவநடேஸ் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்
எஸ். பரமேஸ்வரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சம்பவம்.
காயான்மடு
வித்யாலயத்தில் அதிபராக இருந்த சுந்தரநாதன் நேற்று அங்கிருந்து சிரேஸ்ட
ஆசிரியரிடம் கடமையை ஒப்படைத்து விட்டு வெளியேற முயற்சித்த பொழுது அங்கு
பாடசாலை சமூகம் அவரை வெளியேற விடாமல் தடுத்தது .
எங்களுக்கு சுந்தரநாதன் அதிபர் தான் வேண்டும். வேறெவரும் தேவையில்லை என்று பிரதான வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .




Post A Comment:
0 comments so far,add yours