( வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்புத்  தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்  இந்தியக் கலைஞர்கள் கலந்து சிறப்பித்த கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி நிகழ்வானது   நேற்று முன்தினம்  மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சதமூர்த்தி  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய, வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார்  கலந்து சிறப்பித்தார்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் 
இறைவணக்கத்தினைத்தொடர்ந்து தமிழ் வாழ்த்தானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் கு.விநாயகமூர்த்தியால் இசைக்கப்பட்டது.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க கணக்காய்வாளர் இரா.புவிராசசிங்கம்  வரவேற்புரை நிகழ்த்தினார்.  

இந்தியாவில் இருந்து வருகைதந்த இசைக்கலைஞர்கள் , கலாநிதி வி.அருந்ததி ( வாய்ப்பாட்டு) , வைக்கியம் பத்மா கிருஷ்ணன் ( வயலின் ) , கலாநிதி ஜி.பாபு ( மிருதங்கம்) , கடநாட அனந்தகிருஷ்ணன் ( கஞ்சிரா) , வாழப்பள்ளி கிருஷ்ணகுமார் ( கடம்) ஆகியோரால் மிகவும் சிறப்பாக கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்தியக்கலைஞர்கள்,பிரதம அதிதி ஆகியோர் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்களால் கெளரவிக்கப்பட்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours