( வேதசகா)
இலங்கை
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு தெரிவான சம்மாந்துறை வலய ஆசிரிய ஆலோசகர் கள்
எண்மருக்கு நியமன கடிதங்கள் நேற்று(15) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வைபவம்
சம்மாந்துறை வலய கல்விப் பணிமனையில் கல்விசார் உத்தியோகத்தர்களின்
நலன்புரிச்சங்கத் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான
வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
அங்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அச்சமயம்
வலய பிரதிக் கல்வி பணிப்பாளர்களான அப்துல் மஜீத் ஹைதர் அலி திருமதி
நிதர்ஷினி மகேந்திர குமார் உதவி கல்வி பணிப்பாளர்களான றியால் பரமதயாளன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.







Post A Comment:
0 comments so far,add yours