ஈழ
மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் மற்றும் நீரியல்
வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இன்றைய
விஜயம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட நேர்ந்து உள்ளது.
அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம்
மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்திப்பதற்கும், அபிவிருத்தி வேலை
திட்டங்களை பார்வையிடுவதற்கும் ஏற்பாடாகி இருந்தது.
அதே
போல அவர் நாளை சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு
ஆதரவாளர்களை சந்திப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவதற் கும் ஏற்பாடாகி இருந்தது.
ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர்
சிவானந்தராஜாவின் வழிகாட்டலில் அக்கட்சியின் அம்மாவட்டத்துக்கான அரசியல்
நிர்வாக செயலாளர் சாமித்தம்பி ஆசைத்தம்பியின் முன்னெடுப்பில் மட்டக்களப்பு
அமெரிக்க மிஷன் மண்டபத்தில் மகத்தான வரவேற்பு விழாவுக்கு இன்று ஒழுங்கு
செய்யப்பட்டு இருந்தது.
அதே போல ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் தங்கராஜா
பாலேந்திரனின் வழிகாட்டலில் இம்மாவட்டத்தின் பல இடங்களிலும்
அமைச்சரின் விஜயத்தை ஒட்டிய வைபவங்கள் நாளைக்கு ஒழுங்கு
செய்யப்பட்டு இருந்தன.
குறிப்பாக ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் காரைதீவு மற்றும் திருக்கோவில் பிரதேச ஆதரவாளர்களால்
காரைதீவு பிரதேசத்தில் பிரமாண்டமான வரவேற்பு விழாவுக்கு ஆயத்தம்
செய்யப்பட்டு இருந்தது.
காரைதீவு சிவசக்தி குரு
குடைச்சாமி சர்வமத பீடத்தில் அமைச்சருக்காக விசேட பூசைகள் மேற்கொண்டு
நல்லாசிகள் வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டு இருந்தது. அதே போல காரைதீவை
சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் ஆகியவற்றை செவிமடுத்து
தீர்வுகளை ஆராய்வதற்கும் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால்
நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா நியமனம் வழங்கப்பட்டார். இவருக்கான நியமன கடிதத்தை
கொழும்பில் வைத்து பிரதமர் தினேஸ் குணவர்த்தன வழங்கினார். அதே போல
இக்கட்சியின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனுக்கு
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதே
நேரம் இன்று வெள்ளிக்கிழமை விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்றது.
இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவால் அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இக்காரணங்களால்தான் அமைச்சரின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயம் பிற்போடப்பட நேர்ந்தது.


Post A Comment:
0 comments so far,add yours