பாறுக் ஷிஹான்


 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல்,மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல்,இக்கட்டான பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நோக்கங்களினை அடிப்படையாகக் கொண்டு 2022/2023 ம் ஆண்டிற்கான பெரும் போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம்  அதிமேதகு ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்   தீர்மானத்திற்கமைய நாடு பூராகவும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்முன பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரிசி ஆலைகளில் நெல் கொள்வனவுகளை மேற்கொள்ளும் செயற்திட்டம் இன்று(24) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பெரியநீலாவனையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்ளஸ் கலந்து கொண்டதோடு கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டீ.ஜே.அதிசயராஜ்,அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்,ஏ கலீஸ்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,உட்பட அரிசி ஆலை உரிமையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours