(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தில் நேற்று முன்தினம் (5) ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

 ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கு. சீதாராம் குருக்கள் தலைமையில் உதவிக்குருமார்களான சிவஸ்ரீ ஆ. கோபிநாத சர்மா மற்றும் சிவஸ்ரீ சி.கு. கோவர்த்தன சர்மா ஆகியோரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற தைப்பூசத் திருவிழாவில்காலை 10 மணியளவில் உகந்த மலையில் இருக்கின்ற வள்ளியம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம் பெற்றது.

 மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை ஓய்வு நிலை அதிபர் வேலாப் போடி இலட்சுமிசுந்தரம் அவர்களின் உபயத்தில் தைப்பூச திருவிழா வழமைபோல இம்முறையும் இடம் பெற்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க தெரிவித்தார் .

பாற்குடபவனிக்கான பாலை இலவசமாக தம்பிலுவிலைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஜனாதினி தம்பதிகள் வழங்கினர்.


காலையில் பாற்கூடபவனியை தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை இடம்பெற்றது. மாலையில் திருவிளக்குப்பூஜை வசந்த மண்டப அலங்கார பூஜை சுவாமிகள் உள்வீதி உலா வருதல் என்பன இடம்பெற்றன.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours