(சுமன்)
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள், இயக்குனர் சபை உறுப்பினர்களின் சுற்றுலாப்பயணம் சங்கத்தின் தலைவர் மு.துதீஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க பணியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இயக்குனர் சபையால் மேற்கொள்ளப்படும் இச்சுற்றுலாப் பயணம் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பார்வையிடப்பட்டதுடன், மேற்படி மாவட்டங்களில் அமையப் பெற்றுள்ள பிரசித்த ஆலயங்களில் தரிசிப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours