( வி.ரி. சகாதேவராஜா)


 மட்டக்களப்பு ஆதினத்தில் நாளை(18) சனிக்கிழமை மாலை  பெரும் சிவனிரவுத் திருவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நாளை மாலை 3 மணி முதல் ஆறு மணி வரையான காலத்தில் ஆதீனத்தில் உள்ள 108 சிவலிங்கங்களுக்கு அடியவர்களின் கையினால் நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

 ஆதீன ஸ்தாபக தலைவர் ஸ்ரீமான் மு. ஜெயபால் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த சிவனிரவு திருவிழாவிற்கு பிரதான சொற்பொழிவாளராக இந்தியாவில் இருந்து வருகைதரும் சிந்தனை மருத்துவர் சிவபக்தர்  மருத்துவர் எம்.ஏ.ஹுஸைன்  பிரதான உரையாற்ற இருக்கிறார்கள். "திருமந்திரமும் அறிவியல் விளக்கமும்" என்ற தொனிப்பொருளில் அவரது சொற்பொழிவு இடம்பெற இருக்கின்றது.

மேலும் ,கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறையும் திருமதி கிருபாஞ்சனா குழுவினரும் இணைந்து வீணை இசை ஆராதனை மற்றும் கண்ணகி முத்தமிழ் மன்பத்தினரின் சிவலீலை தென்மொடி நாட்டுக்கு கூத்தும் இடம் பெற இருக்கின்றது.

 அத்துடன் நான்கு சாம பூஜைகள் தொடர்ச்சியாக இளம்பெற இருக்கின்றன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours