(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையில்
96 வருடங்கள் ஜீவ சேவையாற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனின் மற்றுமொரு சேவை
நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று முன்தினம் (5)தைப்பூச
தினத்தன்று நுவரேலியா கொட்டகலையில் நடைபெற்றது.
"சிவானந்த
நலன்புரி நிலையம்" என்ற பெயரில் மலையகத்திற்கான முதலாவது சேவைகள்
நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா ஞாயிறன்று(5) காலை 9 மணிக்கு இலங்கை
ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் தலைமையில்
நடைபெற்றறது .
அங்கு, கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜியின் பஜனைகள் வேதபாராயணம் சகிதம் அடிக்கல் நாட்டினார்.
இ.கி.மிஸனின் மட்டக்களப்பு மாநில தலைவர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
ஹரிங்டன் தோட்டத்தில் அதற்கான நிலத்தை சீமான் விஜயபாலன் செட்டியார் மிஷனுக்கு வழங்கி வைத்து உரையாற்றினார் .
மேலும்,
கண்டி உதவி இந்திய தூதராலாய இந்திய உதவி தூதுவர் கலாநிதி ஆதிரா கலந்து
சிறப்பிக்க,பிரதேச விகாராதிபதி திஸ்ஸமகாராமய தம்மஜோதி கலந்து
சிறப்பித்தார்.




Post A Comment:
0 comments so far,add yours