இ.சுதாகரன்


பட்டிருப்பு கல்வி வலயத்தில் அழகியல்  பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பட்டிருப்பு கல்வி வலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தனுசியா ராஜசேகர் மற்றும் அழகியல் பாடங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட ஆசிரியகள் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் கல்வி ஆண்டுகளில் தரம் 10,11ஆகிய தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் அழகியற் பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான இரு வருட விசேட செயற்றிட்டத்தினை நடை முறைப்படுத்துவற்கான முன்மொழிவுகள் மற்றும் அழகியற் கலைக் கூடத்தினை கல்வி வலயத்தில் நடை முறைப்படுத்துதல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours