நடைப பெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தினைச் சேர்ந்த மாணவன் ஏ.ஜீ.எம். அஹ்னப் கல்முனை வலய கல்வி பிரிவில் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் அதிகூடிய 178 புள்ளிகள் பெற்று
கோட்டத்தில் முதலாமிடம் பெற்று பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனை படைத்தாக பாட சாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தெரிவித்தார்.
அத்துடன் கல்முனைக் கல்வி வலய மட்டத்தில் மேற் குறித்த மாணவன் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன், இப்பாடசாலையில் இம்முறை மேற்படி பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன்மேலும் புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours