பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மகாநாடு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் காளுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

உயர் தரப் பரீட்சை  எழுதிய பிற்பாடு மாணவர் தடம்மாறாது தங்களது திறமைக்கு ஏற்ற வகையில் தொழிலுலகுக்கு  தயர்படுத்தும் நோக்கிலேயே இம் மகாநாடு மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

போட்டி பரீட்சைக்கு முகம் கொடுத்து தொழிலினை பெற்றுக் கொள்ளல், நேர்முக பரீட்சைக்கு  உரிய முறையில் முகம் கொடுத்தல் , பல்கலைக் கழக பாடத்தினை தேர்வு செய்தல், இலக்கை நோக்கி வாழ்க்கையை வெற்றி கொள்ளல்   போன்ற பல   விடயங்கள் குறித்த மகாநாட்டின் போது துறைசார்ந்த வளவாளர்களால் மாணவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டதுடன் வலயத்தில் ஐந்து பாடசாலையில் நடைபெற்ற இம் மகாநாட்டில் சுமார் 900 மாணவர்கள் பங்குபற்றியிருந்தர். 
....பழுகாமம் நிருபர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours