மட்டக்களப்பு
மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல
மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது வித்தியாலய அதிபர்.அ.மனோகரன்
தலைமையில் 10.03.2023 வெள்ளி கிழமை மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
இப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர்
சி.சிறிதரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக வலயத்தின் பிரதி கல்வி
பணிப்பாளர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்திருந்தார்.
இவ்
விளையாட்டு நிகழ்வின் பாண்டு வாத்திய குழுவினரின் கண்காட்சி, உடற்பயிற்சி
கண்காட்சி, மற்றும் இல்லச் சேடனை என்பன. சிறப்பம்சமாக காணப்பட்டதுடன். நடை
பெற்ற அனைத்து விளையாட்டுக்களின் புள்ளியடிப்படையில் இரண்டு இல்லங்கள்
முதலாமிடத்தை பெற்றுக்கொண்டன அந்த வகையில் விவேகானந்தா இல்லம் (சிவப்பு)
விபுலானந்தா இல்லம் (பச்சை) ஆகிய இரண்டு இல்லங்களும் முதலாமிடத்தினை
பெற்றுக் கொண்டதுடன். இராமகிருஸ்ணன் இல்லம் (நீலம்) இரண்டாம் இடத்தினையும்
பெற்றுக் கொண்டன .......பழுகாமம் நிருபர்







Post A Comment:
0 comments so far,add yours