ஆசிரியர் தொழில் என்பது வேறுமனே
கோவைகளுடன் வேலை செய்வது போன்றதல்ல மாறாக உயிர்களுடன் வேலைசெய்கின்றதொரு
சிறந்த பணியாகும் இது கடமையல்ல சிறந்த சேவையாகும். என பட்டிருப்பு
வலயக்கல்லபணிப்பாளர் சி.சிறிதரன் அவர்கள் தெரிவித்தார்.
பட்டிருப்பு
கல்வி வலயத்தில் கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா
ஊழியர்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவானது. வலயக் கல்வி பணிப்பாளர்
தலைமையில் 28.03.2023 செவ்வாய் கிழமை களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று
கிழக்கு மாகாணத்திலே இந்த ஆசிரியர்களுக்கான விளையாட்டு விழாவினை
பட்டிருப்பு கல்வி வலயமானது மூன்றாவது கல்வி வலயமாக நடாத்துகின்றது.
என்பததை நினைத்து பொருமை கொள்கின்றேன்.
இவ்வாறான
விளையாட்டு விழாவினை பட்டிருப்பு கல்வி வலயமானது ஏலவே நடாத்தியிருக்க
வேண்டும். காரணம் மாணவர்கள் மாகாண ரீதியில் மாத்திரமல்ல தேசிய ரீதியில்
மாத்திரமல் சர்வதேச ரீதியிலும் சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஆசிரியராகிய
நீங்கள் உங்களை அர்ப்பணித்து செயற்பட்டுள்ளீர்கள். இதனால்தான்
கூறுகின்றேன் விளையாட்டில் பெயர்பெற்ற கல்வி வலயமென்றால் அது பட்டிருப்பு
கல்வி வலயத்திற்கு மாத்திரந்தான் அந்த உரிமையும், பெருமையும் உண்டு.
இவ்வாறு விளையாட்டினூடாக இந்த கல்வி வலயத்திற்கு முகவரியை பெற்றுக்
கொடுத்த உங்களை ஊக்கப்படுத்த வேண்டிய கடப்பாடு பணிப்பாளர் என்ற வகையில்
எனக்கும் என்னை சார்ந்த குழுவுக்கும் அது இருக்கின்றது.
ஆசிரியர்கள்
அனைவரும் மகிழ்சியுடன் கடமைக்கு சென்றால் மாத்திரமே மாணவர்களுக்கு
மகிழ்ச்சியாக கற்று கொடுப்பதற்கும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்றுக்
கொள்வதற்குமான சூழ்நிலை உருவாகின்றது.
அந்த
வகையில் உங்களுக்கு தெரியும் கொவிட் தொற்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட
பொருளாதர நெருக்கடி காரணமாக எங்களுடைய நாடும் நாங்களும் பல சவால்களுக்கு
முகம் கொடுத்திருக்கின்றோம். அதில் ஆசிரியர்கள் விதி விலக்கல்லல
ஆகவே ஆசிரியர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்து கொண்டு
மாணவர்களின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் எப்போதும்
நான் அக்கறையாகவும் ஆவலாகவும் உள்ளேன். ஆசிரியர்கள் விளையாடுவதைப்பார்த்து
மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைவார்கள்.

.jpg)



Post A Comment:
0 comments so far,add yours