( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச விவசாயிகளிடமிருந்து அரசாங்க நெல் கொள்வனவு வேலைத் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காரைதீவு
பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில், காரைதீவு கமநல அபிவிருத்தி
உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் பிரசன்னத்தில், மாவட்ட விவசாய பிரதிப்
பணிப்பாளர் எஸ்.எம்.கலீஸ் முன்னிலையில், உதவி பிரதேச செயலாளர்
எஸ்.பார்த்திபன் சகிதம் அரச நெல் கொள்வனவு இடம்பெற்றது.
மாவடிப்பள்ளி தனியார் அரிசி ஆலையில் முதற்கட்டமாக ஒரு தொகுதி விவசாயிகளிலிருந்து நேற்று கொள்வனவு செய்யப்பட்டது .
ஈரப்பதன்
1- 14 வீதமுள்ள நெல் ஒரு கிலோ 100ருபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டது.
14-22 வீதமுள்ள நெல் கிலோ 88 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டது.
குறித்த விவசாயிகள் உரம் பெற்ற பற்றுச்சீட்டு கைவசம் வைத்திருக்க வேண்டும்.
உச்சகட்டமாக ஒரு விவசாயிடமிருந்து 5000 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டது.





Post A Comment:
0 comments so far,add yours