( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய விநாயகபுரம் பாலக்குடா மாணவர்களுக்கு இலவசமாக மாலை நேர வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 "ஜெர்மன் உதவும் இதயங்கள்" எனும் அமைப்பு இந்த மாலை நேர வகுப்பை நேற்று ஆரம்பித்து வைத்தது.

ஜேர்மனில் இருந்து வருகை தந்த ஜெர்மனிய உதவும் இதயங்கள் அமைப்பின் தலைவர் எஸ் .ஸ்ரீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்வி நிலையத்தைத் திறந்து வைத்தார் . மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

10 லட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்வி நிலையத்தை திறந்து வைத்த உதவி பிரதேச செயலாளர் சதிசேகரன்  மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகின.

ஜேர்மன் உதவும் இதயங்கள் அமைப்பு வடக்கு கிழக்கில் இப்படியாக 11 இடங்களில் மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தி வருகின்றன.
பாடசாலையை விடுத்து ஏனைய எந்தவிதமான பிரத்தியேக வகுப்புகளும் இல்லாத மிகவும் பின் தங்கிய பிரதேசத்திலே இவ்வாறான கற்கை நிலையத்தை நிறுவி ஆசிரியர்களுக்கும் வேதனைகளை வழங்கி சகல வகுப்புகளுக்கும்
 மாலை நேர வகுப்பை இலவசமாக இந்த நிறுவனம் நடத்தி வருகின்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours