(வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை வலயத்திற்கான தரம் 1 மாணவர்களுக்கான செயல்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம்  அங்குரார்ப்பண நிகழ்வு
சாய்ந்தமருது மல்ஹரு ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. 

 மல்ஹருஸம்ஸ் மகா வித்தியாலய தேசிய  பாடசாலையின் அதிபர் திருமதி எம்.சி..நஸ்லின் றிப்கா அன்சார்  தலைமையில் நடைபெற்ற வலயத்திற்கான இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.
கல்முனை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர் ,  ஜிஹானா ஆலிப் , றியாஸா  மற்றும் விஷேட அதிதிகளாக கோட்டக் கல்வி பணிப்பாளர் மலிக், திருமதி மலிக், மற்றும் ஆசிரிய ஆலோசகர் சஹ்ரூன்,  இணைப்பாளர் றாசிக் , மற்றும் பிரதி அதிபர் தன்சில், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இந் நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து சின்னம் பொறிக்கப்பட்டு வரவேற்பு இடம் பெற்றது. 

 மாணவர்களுக்கான நவீன வகுப்பறைகளில் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான ஆங்கில பாடம் கற்பித்தல் மாதிரி வகுப்பு திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வு கிராஆத் ஓதப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு தொடக்கம் செய்யப்பட்டது.

அதிபரின் ஆரம்ப உரையை தொடர்ந்து கோட்டக் கல்வி பணிப்பாளர் , மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்,ஆகியோரின் உரை இடம்பெற்றது பின்னர்  பிரதி அதிபர் தன்சில் சேர் அவர்களால் வருகை தந்த அதிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைவருக்கும்  நன்றி  உரை நிகழ்த்தப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours