மட்டக்களப்பு
மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் புதுவருட
விளையாட்டு விழா நேற்றும் (26) இன்றும் (27) நாவற்காடு பாரத் விளையாட்டு
மைதானத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில்இடம்பெற்றது.
இதில்
பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ,நிருவாக
உத்தியோகத்தர் தலைமையில் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இதில்
எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம், முட்டி
உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், சங்கீதக் கதிரை,
பின்னோக்கி ஓடுதல் ,சமனிலை ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு
போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல்
பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக உத்தியோகத்தர் கிராம சேவை
உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.







Post A Comment:
0 comments so far,add yours