( வி.ரி. சகாதேவராஜா) .
கல்முனை பிராந்தியத்தில் உள்ள நட்பிட்டிமுனை கிராமத்தில் நேற்று(27) வியாழக்கிழமை அதிகாலையில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.

நற்பிட்டிமுனை 1ஆம் ,2ஆம் பிரிவுகளில் உள்ள  வீடுகளுக்கு சுமார் பத்து யானைகள்  புகுந்து மதில்களை உடைத்தும், கட்டிடங்களை உடைத்தும் சேதம் விளைவித்தன. அத்துடன் விதைப்பதற்கு வைத்திருந்த முளைநெல்லையும் உறிஞ்சி குடித்தன. மக்கள் அச்சத்துடன் பீறிட்டு கத்தினார்கள்.

 அச்சமயம் ,அங்கிருந்த பலர் பொலிசாருக்கும், 119 க்கும், வனபரிபாலன திணைக்களத்திற்கும் தொடர்பு கொண்டனர். முடியவில்லை.

 சுமார் ஒரு மணி நேர அட்டகாசத்தின் பின்னர் யானைகள் பின் வாங்கின.
 காலையில் வனபரிபாலன துறையினர் வந்து படங்களை எடுத்து சேதங்களை பதிவு செய்தனர்.
கல்முனை போலீசாரிடம் இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை காலை மக்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டன.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours