நூருல் ஹுதா உமர்


நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெளசி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக  இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சி எதிர்வரும் 2023.04.17,18 திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ளது. இதில் ஆடை அணிகலங்கள், கிராமிய உணவு உற்பத்திகள் உள்ளிட்ட பெருநாளைக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இக்கண்காட்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது காட்சி கூடங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இக்கண்காட்சியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட காட்சிக் கூடங்கள் தேவைப்படும் தொழில் முயற்சியாளர்கள், உள்ளூர், வெளியூர் மற்றும் தனியார் நிறுவனங்கள் 077 350 8509, 077 814 3568 ஆகிய இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கடைகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours