அம்பாறை மாவட்டம் வீரமுனையினை  பிறப்பிடமாகவும் தம்பிலுவிலை வதிவிடமாகக் கொண்ட சமூக செயற்பாட்டாளரான  மகேஸ்வரன் கண்ணதாசன் அவர்கள் சமாதான நீதவானாக  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் . 

அம்பாறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி  மற்றும் மஜிஸ்ரைட் குற்றவியல் நீதிபதி லுஷாக்கா  குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி இந்த நியமனம் வழங்கப்பட்டது .

மகேஸ்வரன் கண்ணதாசன் தனது ஆரம்பக்கல்வியை வீரமுனை இரா மகிருஷ்ணர் வித்தியாலயத்திலும், கமு /திகோ /தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திலும், உயர் தர கல்வியினை மட்டக் களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியிலும் , தனது இளமானி பட்டப் படிப்பினை சம்மாந்துறை இலங்கை உயர் தொழிநு ட்ப கல்வி நிறுவனத்திலும் HNDA /B .Com ) முதுமானி பட்டப்படிப்பினை இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்திலும் (Master 𝕠𝕗 Development Economic ) கற் றுள்ளார் .

இவர் பல அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களிலும் கடமையாற்றிய ஓர் சமூக சேவகர் ஆவார் பின்னர் சமுர்த்தி திணைக்களத்தி ன் சமுர்த்தி முகாமையாளராகவும் கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது .

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் ஆய்வு உத்தியோத்தர் ஆகவும் அவரின் பிரத்தியோக செயலாளராகவும் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது .

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours