நூற்றாண்டுகள்
பழமையான ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடி பிள்ளையார் ஆலயத்தின் மகா
கும்பாபிஷேகம் இன்று (8) சனிக்கிழமை வாஸ்துசாந்தியுடன் ஆரம்பமாகிறது.
சித்தர்கள் குரல் அமைப்பின் இவ்வாண்டின் முதலாவது கும்பாபிஷேக உபயம் இவ் ஆலயத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.
எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நாளை (9) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம் பெறும்.
வரும் திங்கட்கிழமை(10) காலை 9.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அகில
உலக மகா சித்தர்கள் அறக்கட்டளை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான
ஆலோசகரும் வாரணாசி பெலாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சித்தவித்யாகீர்த்தி
வேதிக்பண்டிற் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் குருஜி கும்பாபிஷேகத்தை
நெறியாழ்கின்றார்.

Post A Comment:
0 comments so far,add yours