(அபு அலா)

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 13 முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை UnV Foundtaton அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த அமைப்பின் தலைவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு நேற்று (27) கிண்ணியா காரியாலயத்தில் அதன் முகாமையாளர் சதாத் கரீம் தலைமையில் இடம்பெற்றது.

களத்தில் நின்று செய்திகளை சேகரித்து அந்த செய்திகளை உடனுக்குடன் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய ஐக்கிய ஊடகவியளாலர் ஒன்றியத்தின் (நுஜா) திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் சிரேஷ்ட ஊடகவியளாலர் பைஷல் இஸ்மாயிலினால் UnV Foundation என்ற அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours