(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தொழில் சார் ஊடக சங்கம் மட்டு ஊடக அமையம் இணைந்து படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 19 ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூவியில் இன்று புதன்கிழமை(31) ஊடகவியலாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் மற்றும் வணபிதா சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிந்து சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினா.;
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் பிரிந்ததற்கு பின்னர் முதலாவது வேட்டுவைத்த ஊடகவியலாளர் சடேசன் பார்கின்றோம் 22 வருடங்களாக வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த அவரை இழந்திருக்கின்றோம்.
2000 ஆயிரம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாக 2001 ம் ஆண்டு வெற்றியளித்தது இருந்தபோதும் 2009 விடுதலைப் புலிகள் போராட்டம் மௌனித்ததற்கு பிற்பாடு இன்று நாங்கள் பார்க்கின்றபோது ஒரு தலைவரை ஒற்றக் கதிரையில் பார்த்தநாங்கள் இப்போது 10 தலைவர்களை 10 கதிரையில் இன்று பார்க்கின்றதுடன் யார் தலைவர் என யாருக்கும் தெரியாத நிலையில் தமிழ் தேசிய அரசியல் 19 வருடம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்துக்காக பல்வேறு பட்டவர்கள் போராடினால் கூட ஊடகவியலாள் பங்களிப்பு அந்த கால நிலையில் படகிழக்கு உடகவியலாளர்கள் தமிழ் தேசியத்துக்கான விடுதலை கிடைக்க வேண்டும் என அவர்களின் பேனா முனையில் போராடியதன் நிமிர்தமாக சிறிலாங்கா பேரினவாதம் திட்டமிட்டு 46 ஊடகவியலாளர்களை படுகொலை செய்தனர்.
பிரேமதாஸா தொடக்கம் இப்போது உள்ள ஜனாதிபதி வரையில் ஜனாதிபதிகள் மாறியிருக்கலாம் ஆட்சி மாறியிருக்கலாம் ஆனால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்கதா சூழ்நிலையில் இந்த 19 நினைவேந்தல் செய்துகொண்டிருக்கின்றோம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நீதி செய்ய மாட்டார்கள் எனவே சர்வதேச மட்டத்தில் நீதிகிடைக்க வேண்டும் என கூறிவருகின்றோம்.
வடகிழக்கில் பல ஊடகவியலாளர்கள் துணிந்து பல விடையங்களை வெளிக் கொண்டுவந்தாலும் கூட அவர்களுக்கும் அச்நுறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றதுடன் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு செல்லலாம் என்ற அச்சுறுத்தலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
ஆகவே சமாதனம் என்று சொல்லுகின்றவர்கள் நாட்டில் யுத்தமில்லை என்று சொல்லுபவர்கள் எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் யுத்தம் மௌனித்தாலும் கூட தமிழ் மக்களுக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வு வரும் வரை நாங்கள் அச்சுறுத்தப்பட்ட ஒரு இனமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
Post A Comment:
0 comments so far,add yours