எஸ்.சபேசன்
தனது 31 வருட ஆசிரியர் சேவையில் இருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி ஓய்வுபெற்றுச்செல்லவுள்ள கணிதப்பாட ஆசிரியர் எம் ஏ சிறாஜுத்தீன் அவர்களது கல்விச் சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அவர் கற்பித்த பாடசாலையான. மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியில் இடம் பெற்றது.
இவர் தனது ஆரம்பக்கல்வியினை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் கற்று கணிதத்துறையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் தனது நியமனத்தினைப் பெற்று பலதரப்பட்ட மாணவர்களை வைத்தியத்துறை பொறியியல்துறை உட்பட உயர்நிலைக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.
மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியினைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கற்கின்ற ஒருபாடசாலை இப்பாடசாலையில் இவ் இரு இன மாணவர்களின் மனதைக்கவர்ந்த சிறந்த ஆசான்; சிறாஜுத்தீன் ஆசிரியர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது


.jpeg)
.jpeg)


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours