( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம்
செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த ஆறாம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி
தலைமையிலான யாழ். கதிர்காம பாதயாத்திரைக்குழு நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை
வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை
வந்தடைந்தனர்.
காலையில் சாம்பல் தீவு சல்லியம்மன் ஆலயத்தை தரிசித்து விட்டு கடல் மார்க்கமாக திருமலை நகரை அடைந்தனர்.
கடல்
மார்க்கமாக இயந்திரப்படகு மூலம் திருமலை மூன்றாம் கட்டையை வந்தடைந்தனர்.
எலவே இவர்கள் புல்மோட்டை பிரதேசத்திலும் கடல் மார்க்கமாக பயணித்தமை
குறிப்பிடத்தக்கது.
ஜெயா
வேல்சாமி தலைமையிலான குழுவினர் 17 ஆவது நாளான நேற்று திருகோணேஸ்வரர்
ஆலயத்தை தரிசித்து அங்கு பகல் போசனத்தையும் நிறைவு செய்தனர்.



Post A Comment:
0 comments so far,add yours