பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தைக் குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நேற்றைய தினம் (30.04.2023) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா ஊடகங்களுக்கு இன்றைய தினம் (01.05.2023) கருத்து தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறைக்கப்படும் கட்டணம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளைய தினம் (02.05.2023) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியால், பெற்றோர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, விலை குறைப்பின் நன்மையினை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours