( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அதிபர் கே கணேஷ் தலைமையில் நடைபெற்றது.


சம்மாந்துறை நஜா பவுண்டேஷன் அமைப்பினரால் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதிகளாக உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பவுண்டேஷன் சார்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் ஐநூல் ஜாரியா நபீர் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக ஆசிரிய ஆலோசகர்  இசட் எம். றிஸ்வி கலந்து சிறப்பித்தார்.
 
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உதாரணங்கள் வழங்கப்பட்டது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours