முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுக்குள் விழுந்தததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி நோக்கிவந்த முச்சக்கரவண்டி காத்தான்குடி பிரதான வீதி நுழைவாயில் முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயற்சித்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுக்குள் விழுந்துள்ளது.முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தை பயணம் செய்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours