கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும்    பொலிஸ் நிலையத்தில்   இடம்பெற்றது.


இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில்   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க  கலந்து கொண்டு   அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.


 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல்  பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.




மேலும் இந்நிகழ்வில்   சவளக்கடை, சம்மாந்துறை ,பெரியநீலாவணை, காரைதீவு, சாய்ந்தமருது,   பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours