வரலாற்றுப்
பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப் பாதையில் இவ்வாண்டு ஆக 27109 பேரே
பயணித்துள்ளனரென குமண வனஜீவராசிகள் திணைக்கள வட்டாரம் தெரிவித்தது.
குறித்த
காட்டுப்பாதை கடந்த ( 12) திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமானால் சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டு 15 நாட்கள் திறந்து
வைக்கப்பட்டு கடந்த 27 ஆம் திகதி மூடப்பட்டது.
கடந்த வருடம் கொட்டும் மழைக்கு மத்தியில் பலத்த அசௌகரியத்துடன் 28820 பேர் காட்டுப் பாதையில் பயணித்திருந்தனர்.
இம்முறை
45 ஆயிரம் பேர் அளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கடந்த
ஆண்டைவிட சுமார் 1500 பேரளவில் குறைவாகவே பயணித்துள்ளனர்.
ஆக கடந்த 19 ஆம் தேதி மட்டும் சுமார் 4000 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுலை மாதம் 4 திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
Post A Comment:
0 comments so far,add yours