(க.விஜயரெத்தினம்)


வரலாற்றுச் சிறப்புமிக்க துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் "வட்டுக்குத்துதல் பூசையினை சிறப்பிக்கும்" வகையில் நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி புலமையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(5)இரவு 9.00 மணியளவில் ஆலயத்தில் தலைவர் மு.தருமரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன்,பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.ஜெயந்திமாலா பிரியதர்சன்,அம்பாறை பொத்துவில் லகுகல பிரதேச செயலாளர் எஸ்.நவநீதராஜா,இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தின் ஓய்வுநிலை பணிப்பாளர் செல்வி வயிரமுத்து விஜயலெட்சுமி,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கே.சரவணமுத்து,மற்றும் ஊடகவியலாளர்கள்,ஆலயங்களின் தலைவர்கள்,ஆன்மீக அதிதிகள் ,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள்,அடியார்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த கௌரவிப்பு விழா துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி பொதுச்சாதாரணப் பரீட்சையில் 6(A)ஏக்கு மேற்பட்ட சித்திகளை பெற்ற 9மாணவர்களும்,தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 12 மாணவர்களும்,மற்றும் க.பொ.உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி படித்துக்கொண்டிக்கும் 14 பல்கலைக்கழக மாணவர்களுமாக  35மாணவர்கள் அதிதிகளினால் பாராட்டி, பரிசுப்பொருட்கள் வழங்கியதுடன் வருகைதந்த இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்கள்.













Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours