(எம்.ஏ.றமீஸ்)

 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் இன்று(01) அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபள்யு.சி.பி.எம்.விஜயத்துங்க பண்டார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்நாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் பண்டார உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், அலுவலகங்கள், ஆவணங்கள் என்பவற்றை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள மோட்டார் வாகனங்கள், துவிச்சக்கரவண்டிகள் போன்றவையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் பொலிஸ் நிலைய வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பினை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்நாயக்க    பார்வையிட்டதுடன் பொலிஸாரின் மரியாதையினையும் ஏற்றுக்கொண்டார்.
இதுதவிர அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொலிஸ் பொதுமக்கள் நட்புறவினை வலுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours