மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இன்று விவசாயி ஒருவர் உயிரிழந்துள்தாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதுடைய கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, இ.ஜி.சஜிந்த றங்கண என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று கொணாகொல்ல பகுதியிலிருந்து சின்னவத்தையில் தான் மேற்கொண்டிருந்த வேளாண்மைச் செய்கையை பார்வையிடுவதற்காக வந்துள்ள நிலையில் வயல் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.
Post A Comment:
0 comments so far,add yours