( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு பயபக்தியுடன் களைகட்டி வருகிறது.

வரலாற்று பிரசித்தி பெற்ற  காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்சி சடங்கு கடந்த மூன்று வருடகாலத்தைவிட  ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடந்தேறி வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து சடங்கில் கலந்து கொண்டனர்.

பறை மேளம் குழல் ஒலிக்க, கப்புகன்மார் முன்னிலையில், உடுக்கை ஒலியுடன் பக்தர்களின் அரோஹரா கோஷம் குரவை ஒலிக்கு மத்தியில ஊர்சுற்றுக்காவியம் பாடல் இடம்பெறுகிறது.
  பகலில் பச்சை கட்டல் நிகழ்வு நடந்தேறி வருகிறது.
எதிர்வரும் 06 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடுதலுடன் சடங்கு நிறைவடையும்.

 இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours