யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா, புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயகலா மகேஸ்வரனுடன் வானில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours