வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல்விழா உற்சவத்திற்காக வரலாற்றில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் வேல்கள் தாங்கிய அடியார்களுடனான மாபெரும் வேல் யாத்திரையின்போது,
ஆறு நாட்களும் ஆயிரம் அடியார்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
திருமூலர்
பெருமானின் அருளாசியுடன், சித்தர்களின் குரல் சிவசங்கர் குருஜியின் நேரடி
வழிகாட்டலின் கீழ் இந்த மாபெரும் வேல் யாத்திரை வேலோடுமலை முருகன்
ஆலயத்தின் ஆதீனகர்த்தா முருகஸ்ரீ தியாகராஜா ஆசிரியர் வேல்சாமியாக இருந்து
வெற்றிகரமாக நடைபெற்றது.
பாதயாத்திரை
மேற்கொள்ளப்பட்ட ஆறு நாட்களிலும் யாத்திரீகர்கள் அனைவருக்கும் மூன்று
வேளை சாத்வீக உணவும், இரண்டு வேளை தேனீரும் இலவசமாக வழங்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. வேல் யாத்திரை அடியார்கள் மட்டுமல்ல ஏனைய
அடியார்களுக்கும் சுமார் 1500 யாத்திரீகர்களுக்கு வழங்கப்பட்டது.
சித்தர்கள்
குரல் அமைப்பின் நளபாகச் சக்கரவர்த்தி மதியண்ணா தலைமையிலான குழுவினர்
சிறப்பாக அலுப்பில்லாமல் விருப்புடன் உணவு தயாரிப்பில் செயற்பட்டமை
காணக்கூடியதாக இருந்தது.
அனைத்து
ஏற்பாடுகளும் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர்
மனோகரன் ஆகியோரின் நேரடி ஏற்பாட்டின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றது..
வரலாற்றில் ஆறு நாட்களும் உணவளித்த நிகழ்வு இவ்வருடமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்.
Post A Comment:
0 comments so far,add yours