உகந்த முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாதை யாத்திரை சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று(22.06.2023) மாலை உயிரிழந்துள்ளார்.
குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகுதியில் வைத்து பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த குறித்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours