வரலாற்றுப்
பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை ( 12) திங்கட்கிழமை காலை
சம்பிரதாய பூர்வமாக திறக்கப்படும்.
மீண்டும் அது ஜூன் 25 ஆம் திகதி மூடப்படும்
கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4 திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
கடந்த வருடம் 28820 பேர் காட்டுப் பாதையில் பயணித்திருந்தனர். இம்முறை 45 ஆயிரம் பேர் அளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, உகந்தை மலை முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

Post A Comment:
0 comments so far,add yours