பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனிதாபிமான உதவிக் கொடுப்பனவு வழங்கல்


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்
மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

 இச் செயற்றிட்டம் தொடர்பாக  நேற்று(19) மாவட்ட செயலக  மாநாட்டு மண்பத்தில்  உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்  தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாகரை, செங்கலடி, வவுணதீவு, வெல்லாவெளி  மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகங்களில் இருந்து  6000 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுப்பணவு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் உதவித் தொகைத் திட்டமானது  மாற்றுத்திறனாளிகளைக் கொண்டுள்ளோர், சுகாதார பாதுகாப்பு தேவையுடையோர், சிறுவர்கள், பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட் குடும்பங்கள், பாலின அடிப்படையில் வன்முறைக்கு உள்ளானவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பம்  முதலானோரில் தெரிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம்  Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டத்தின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பயனாளர் தெரிவு மற்றும் தரவு திரட்டல் பிரதேச செயலகங்களினூடாக இடம்பெற்று இறுதியாக மாவட்ட செயலகத்தின் விசேட குழுவினால் தெரிவுசெய்யப்படும்.

இச் செயற்திட்டத்தின் நிதி  அனுசரணை UNFPA மற்றும் Save the Children வழக்க  உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூத்தி,பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயளாலர்கள், வைத்திய அதிகாரிகள், Save the Children நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்திட்ட இணைப்பாளர் சிவதர்ஷினி, மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதான்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், Save the Children நிறுவனத்தின் அதிகாரிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.












 Children நிறுவனத்தின் அதிகாரிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours