(எம்.ஏ.றமீஸ்)

உலக சுற்றாடல் தின அனுஷ்டிப்பு நிகழ்சித் திட்டத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று கல்வி வலய அறிவுறுத்தல்களுக்கிணங்க அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் சுற்றாடலை மேம்படுத்தும் ஒரு வார கால விஷேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஊடாக ஏற்படும் மாசடைவைத் தடுப்போம் எனும் தொனிப் பொருளிற்கமைவாக இப்பாடசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(12) அதிபர் ஏ.பி.முஜீன் தலைமயில்  இடம்பெற்றது. இதன்போது பிரதி அதிபர்களான எம்.இக்பால், எஸ்.எம்.எம்.ஜாபீர், உதபி அதிபர்களான ஏ.எம்.நபீல், ஏ.எல்.சம்சுல் பழீல், ஏ.எல்.முகைதீன்பாவா, ஆசிரியர் எம்.ஐ.இக்பால் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்திற்கமைவாக, இப்பாடசாலைச் சுற்றுப் புறச் சூழலினை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கும் வகையில் பாடசாலை வளாகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், சுற்றுப் புறச் சூழலினை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்தல், நிலைபேறுடைய காணி முகாமைத்துவம், நீர் மற்றும் நீர் மூலங்களின் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள், உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பு, வளி மாசடைதல் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கான நிகழ்வுகள் போன்றன இப்பாடசாலையில் இவ்வாரம் முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளன.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours