வடமேல் மாகாணத்தில் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 08 கல்வி வலயங்களிலும் 31 பிரிவுகளிலும் இந்த வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சேர்ப்பு நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை எனவும், உடனடியாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours