சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 72 ஆவது குருபூசை விழா இன்று 26ஆம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெறுகிறது.
சுவாமி
மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி மடாலயத்தில்
இன்று 72 ஆவது குருபூஜை வழமைபோல் சிறப்பாக நடைபெறுகிறது.
"'சித்தத்தில் உறைந்தவராம் சித்தானைக்குட்டி எங்கள் சித்தமெல்லாம் நிறைந்தவராம் சித்தானைக்குட்டி."
இவ்வாறு
பக்தர்களால் அன்போடு பக்தியோடு நம்பிக்கையோடு பாடித்துதிக்கப்படும் ஸ்ரீ
சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு இன்று72 வது குருபூஜை.
சுவாமி கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவில் 1951 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 21 ஆம் நாள் சுவாதி நட்சத்திர தினத்தன்று ஜீவ சமாதியானார்.
பாரத நாட்டின் இராமநாதபுரத்து சிற்றரசன் மகனாக அவதரித்த இம்மாபெரும் சித்தர் ஆடிய சித்துக்கள் எண்ணிலடங்கா.
கதிர்காம
திருவிழா காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த இம்மகான் கதிர்காம
காட்டில் வழிதப்பியவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். மேலும் சாண்டோ சங்கரதாசை
பெரும் இரும்பரசனாக புகழ் பூக்கச் செய்தவரும் சித்தானைக்குட்டிசுவாமிகளே!
இவர்
ஆடிய சித்துக்களில் குறிப்பிடத்தக்கவை: ஊமையை பேசவைத்தார். மாண்டபெண்ணை
உயிர்ப்பித்தார். கடலில் அகப்பட்டவனை மீட்டார் மாட்டிறைச்சி மல்லிகைப்
பூஆக்கினார். கடலின் மேலால் நடந்தார்.ஒரு முறை கல்முனை சந்தியில் நின்று
கதிர்காமத்தில்
தீப்பிடித்த திரை சேலையை அணைத்தார். அறுத்த மீனை பலா சுளையாக மாற்றினார்.
இவர் ஆடிய சித்துக்கள் இன்னும் பல பல...
காரைதீவு 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட போது
சித்தானைக்ககுட்டி
சமாதி கோயில் மட்டும் தப்பியது மிக மிக அற்புதமானதொன்றாகும். ஜீவ சமாதி
அடைந்த இந்த மகான் இன்றும் அவரை சரணடைந்தவர்களை எத்தனையோ
ஆபத்தானசூழ்நிலைகளில் இருந்து காத்து வருகின்றார் என பக்தர்களிடம் இருந்து
பல்வேறு அனுபவங்களை கேள்விப்படுகின்றோம்.
2011ம்
ஆண்டு சுவாமியின் 60 வது குருபூசை தினத்தில் ஐம்பொன் சிலை பிரம்மரிஷி மலை
அன்னை சித்தர் இராஐ்குமார் சுவாமி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆதியந்த மொன்றுமிலா ஐயன் வாழ்க
அருட் சக்தி வாழ்க ஜங்கரனும் வாழ்க
சோதி வடிவேல் வாழ்க தூயோர் வாழ்க
தொண்டர்ரெலாம் துயரின்றி வாழ்க வாழ்க
பூதலத்தில் மக்களெல்லாம் ஓர் தாய் பெற்ற
புத்திரர் போல் ஒருமித்து பொழிந்து வாழ்க
சாதிமத பேதமில்லா சன்மார்க்கத்தை தந்த
சித்தர் சித்தானைக்குட்டி வாழ்க வாழ்கவே.”
(சித்தர்துதி)
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
Post A Comment:
0 comments so far,add yours