( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்
பிரசித்தி பெற்ற மாவடி கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி வேல் விழா
உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் நேற்று முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை
சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து விசேட பூஜையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
சுமார் ஆயிரம் அடியார்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளக்க ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours