( வி.ரி. சகாதேவராஜா)
இன்று
முதல் தீர்த்தம் வரை ஆலய புனிதபிரதேசம் போதைப்பொருளற்ற வலயமாக பொலிசார்
பிரகடனம் செய்துள்ளனர். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி
ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்
தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில்
உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன், சுகாதார வைத்திய அதிகாரி
டாக்டர் எஸ். மோகனகாந்தன், ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்,
வண்ணக்கர் வ.ஜயந்தன் ,உள்ளிட்ட பரிபாலன சபையினர் திணைக்கள தலைவர்கள்
அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
மக்களின் நலனுக்காக குடிநீர் போக்குவரத்து மின்சாரம் சுகாதாரம்
பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆலய
பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் கடந்த வாரம் கிழக்கு மாகாண
ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இடம்பெற்ற சந்திப்பு பேச்சுவார்த்தை பற்றி
எடுத்துரைத்தார்.
இந்த
உற்சவம் எதிர்வரும் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 நாட்கள்
திருவிழாக்கள் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி ஆடிஅமாவாசை தீர்த்த
உற்சவத்துடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours