(கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியினல் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் கட்சி உப தலைவருமான இரா. துரைரெட்ணம் தலைமையில் நேற்று சனிக்கிழமை (22) உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறவினர்களை கௌரவித்தனர்.


ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இருந்து உயிரிழந்த படுகொலை செய்யப்பட்ட தோழர்களை வருடாவருடம் நினைவு கூர்ந்து அவர்களின்; உறவுகளை கௌரவிக்கும் 7வது நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இரா. துரைரெட்ணம், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி மத்தியகுழு உறப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட கட்சி தலைவர் பத்மநாபா மற்றும் கஞவாஞ்சிகுடி, மண்டூர், காரைதீவு, கல்முனை, திருக்கோவில், அக்கரைப்பற்று, போன்ற வலயங்களில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவப்பத்திற்கு முன்னால் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மல் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து உயிர்தியாகம் செய்த தியாகிகளின் உறவினர்களுக்கு பொன்னாடை பேர்த்தி பொறிக்கப்பட் தியாகிகளின் திருவுருவ படங்களை வழங்கி கௌரவித்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours