இனவாதிகளான
சரத் வீரசேகர மற்றும் ஹாபீஸ் நசீர் அகமத் போன்றோர் இந்த மண்ணில் இருக்கும்
வரை இலங்கையில் ஒருபோதும் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு
விடப் போவதில்லை.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில் நேற்று தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்..
அண்மையில்
இன நல்லுறவுக்கு குந்தகமாக அமைச்சர் சரத் வீரசேகர முன்னாள் முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அகமத் ஆகியோர் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு இருந்தார்கள்
.அது மிகவும் குந்தகமாக இருக்கின்றது.
பாராளுமன்ற
உறுப்பினர் நசீர் அகமத் தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிட்டு
மலையகத் தமிழர்கள் கிழக்குத் கிழக்கு கிழக்கான் மலையகத்தான் என்கின்ற
வேறுபாடான பிரிவினைவாத கருத்துக்களையும் இனவாத கருத்துக்களையும் கூறி
கௌரவமாக மக்களுக்காக பணியாற்றி வருகின்ற கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான்
அவர்களுக்கு சேறு பூசுகிறார்.
கௌரவ ஆளுநருக்கு காட்டுமிராண்டித்தனமான அறிக்கை விடும் அவர் ஒழுங்கு முறைகளையும் புரோட்டோகோல் கற்றுக் கொள்ள வேண்டும்
உண்மையில்
ஆளுநர் செந்தில் தொண்டமான் இனமத குல வேறுபாடு இன்றி மூவின மக்களுக்கு,
மந்தகதியாக இருந்த நிர்வாக செயல்பாடுகளை துரிதப்படுத்தும் செயல்பாட்டை
முன்னெடுத்து வருகின்றார்.
அதன்
அடிப்படையில் உண்மையிலேயே சீரரழிக்கும் வகையிலும் பணிகளை மழுங்கடிக்கும்
வகையிலும் ஒரு கண்டனம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் அவர்.
பெரும்பான்மையினத்திலே
சரத் வீரசேகர் அவர்கள் தமிழ் நீதிபதி விதிக்கின்ற தீர்ப்புகள் ஏற்றுக்
கொள்ள முடியாது என்றும் அதேபோன்று மலையகத்து ஆளுநரால் மலையகத்தில்
பிறந்தவர் கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்து அவருடைய செயல்பாடு
செயல்படுத்த முடியாது அவருடைய அப்பன் வீட்டு சொத்தா கிழக்கு மாகாணம் என்று
கேட்கின்றார் கிழக்கு மாகாணம் என்ன அவருடைய வாப்பா வீட்டுச் சொத்தா?என்று
அவரிடம் நான் கேட்கின்றேன்.
ஆகையால்
பணம் கொடுத்து பல அதிகாரங்களை பெற்று பல தமிழர்களுடைய இருப்புகளை இல்லாது
ஒழிப்பதற்கு இனவாத செயல்பாட்டை தீட்டுகின்றார் இது தொடர்பாக பல
அமைப்புக்கள் இதற்குரிய கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்
என்கின்ற விடயத்தை பொதுப்படையாக கூறுகின்றேன்.
Post A Comment:
0 comments so far,add yours