மட்டக்களப்பு
இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சுவாமி விபுலானந்தர்
நினைவு பேருரை-1 எதிர்வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு
இந்து இளைஞர் மன்றத்தின் கல்லடி முதியோர் இல்லத்தில் நடைபெறும்.
பேராசிரியர் செ.யோகராசா "தமிழில் பல்துறை முன்னோடி சுவாமி விபுலானந்தர்" என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
மன்றத்தலைவர்
சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் நடைபெறும் நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
சுரர்ச்சிதானந்த ஜீ மகராஜ் பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி நடராஜா சிவலிங்கம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மன்ற
காப்பாளர் மு.பவளகாந்தன் மற்றும் நூற்றாண்டு விழா தலைவர் க. பாஸ்கரன்
ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ள உள்ளதாக மன்ற பொதுச் செயலாளர் ப. முருகதாஸ்
தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours