(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீடு ஒன்றில் மலசல 4டம் சென்ற முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துவிட்டு எடுத்துக் கொண்டு அவரை தள்ளி கீழே வீழ்திவிட்டு  தப்பி ஓடிய அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள இளைஞன் ஒருவரை கைது செய்த சம்பவம் நேற்று புதன்கிழமை (26) மாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

இருதயபுரம் மேற்கு 8ம் பிரிவிலுள்ள முதியவரான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சம்பவதினமான நேற்று மாலை 4.30 மணியளவில் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளிபகுதியிலுள்ள மலசலகூடம் நோக்கி அவசரமாக சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்துவந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்திலிருந்த ஒன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரை தள்ளிகீழே வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளாhர்.

இதனையடுத்து பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமரா மூலம் குறித்த கொள்ளையனை அடையாளம் கண்டுகொண்ட பொலிசார் கொள்ளையடிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து 4 வது வீட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்த தங்க சங்கிலியை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகபொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours