ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
அதற்கமைய விரைவில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடுவோம்.இந்த கலந்துரையாடல் வடமேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னர் மாகாண சபையுடன் இணைந்து மாகாண மட்டத்தில் முழு நாள் நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இங்குள்ள பாடசாலைகளில் 95 சதவீத பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறை இருப்பதை நாம் நன்கு அறிவோம்.
Post A Comment:
0 comments so far,add yours